மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு

பெண்கள் அனைத்து துறைகளிலும் முன் வர வேண்டும் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை 3.00 மணியளவில் கல்லடி பேச்சி அம்மன் வளாகத்துக்குள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு செயலகத்தின் பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சினி முகுந்தன் (காணி) பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

சிறப்பு அதிதிகளாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி காமினி யூட் இன்பராஜா, மண்முனை வடக்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன் நிர்வாக சேவை உத்யோஸ்தர் கலந்து கொண்டார்.

பிரதேசசெயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெ.சந்திரசோதி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆ. டிலானி இவ் நிகழ்வை வழிநடத்தினர்.

அத்துடன் கே.ராஜன் கல்லடி, சித்தி விநாயகர் ஆலய முகாமையாளர் ஸ்ரீ நமச்சிவாய ஹரிதாஸ், கோயில் தலைவர் பொ.குணசீலன் கலந்து மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கவிதை, உணர்வுபூர்வமான பெண்மை பாடல், நடனங்கள் என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நடனங்களை வழங்கிய அறநெறி பாடசாலை மாணவிகளுக்கு பரிசுகளை பிரதமர் அதிதிகள் வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்