சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் தெரிவித்து கெபிதிகொல்லேவ பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
முதலில் கெபிதிகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
- Advertisement -
பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கன்னத்தையும், வாயின் உட்பகுதியையும் சேதப்படுத்தும் வகையில் தாக்கியதாக பதில் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மொனராகலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் அதமலே பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட 05 பிரதிவாதிகள் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவர்கள் நேற்று மொனராகலை நீதவான் சஜினி அமரவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -