தொலைக் காணொளி ஊடாக ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்
தொலைக் காணொளி ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










