உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேட்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் விதிமுறைகளை மீறாமல் செயல்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவிக்கிறது.
- Advertisement -
அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, வாக்கெடுப்பு தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
- Advertisement -