Sri Lanka Tamil News Site

மேலும் ஐந்து இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

- Advertisement -

-யாழ் நிருபர்-

நீண்ட இடைவெளியின் பின்பு இன்று திங்கட்கிழமை ஐவர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

- Advertisement -

பாரதி புரத்தைச் சேர்ந்த ஓர் ஆண், ஓர் பெண் மற்றும் 3 சிறுவர்களே இன்று அதிகாலை  இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் சென்று தரை இறங்கியுள்ளனர்.

இவ்வாறு தமிழ் நாட்டிற்கு சென்றவர்களை தமிழக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பின்பு மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

- Advertisement -