-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை – நிலாவெளி, கும்றுப்பிட்டி முதலான பிரதேசங்களில் பப்பாசி செய்கையாளர்கள் இம்முறை பாரியநஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பப்பாசி செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் செய்கை பண்ணப் பட்டு வருகின்றன.
வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை குறைவினால் பப்பாசிப்பழம் சரியான முறையில் விற்கப்படுவதில்லை.
முன்னர் போல் அவர்கள் பழ த்தை கொள்வனவு செய்ய வருவதில்லை என பப்பாசி செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
உள்ளூர் வியாபாரிகளினாலும் உரிய விலையில் வாங்கப்படுவதில்லை. இதனால் எமது பப்பாசி செய்கை இந்த முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
பப்பாசிக்கு தேவையான யூரியா, எம்.ஓ.பி, டி.எஸ்.பி முதலான பசளைகள் கிடைப்பதில்லை, அத்தோடு விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
ஒரு பப்பாசி கன்றின் உடைய விலை 125 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன அவற்றுக்குத் தேவையான பசளை மற்றும் நீர் பாசனம் என்பனவற்றுக்கு செலவு செய்யப்படுகின்றன.
பப்பாசி செய்கை பண்ணுவதற்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து வருகின்றோம் எனினும் செலவு செய்து வருமானம் கிடைப்பதில்லை.
தமது வருமான தொழில் இதுவென தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக பப்பாசிச் செய்கை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பப்பாசி செய்கையில் வீழ்ச்சி ஏற்படுகின்ற போது அரசாங்கம் எமக்கு உதவி செய்ய வேண்டும் என பப்பாசி செய்கையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -