மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையின் மற்றய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை நிலவும்.
மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.