-கிளிநொச்சி நிருபர்-
மின்சார ஒழுக்கு காரணமாக வாகனம் ஒன்று வீதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு நெல்லியடை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது குறித்த வாகனம் திடீரென மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
- Advertisement -
குறித்த சம்பவம் வல்லைக்கும் குஞ்சர் கடைக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -