தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தடுத்து நிறுத்திய போது, குறித்த யுவதி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜாஎல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நலையமொன்றின் அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை சோதனை செய்து குறித்த யுவதியின் வசிப்பிடம் அடையாளம் காணப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கந்தானை பிரதேசத்தில் உள்ள யுவதியின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது, அவர் மனப்பிரச்சினை காரணமாக இவ்வாறு செயற்பட்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
குறித்த யுவதி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.