மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் குஷ் ரக போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொழும்பு, பாணந்துறை, பொரலஸ்கமுவ, பாதுக்கை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு பொதிகள் ஊடாக அனுப்புவதற்கு தயார்ப்படுத்தப்பட்டு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த பொதிகளை சுங்கப்பிரிவினர் சோதனையிட்ட நிலையில் அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
13 மில்லியன் ரூபா பெறுமதியான 207 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 750 கிராம் குஷ் போதைப்பொருட்கள் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.