-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற குறித்த 4ஆவது காலாண்டுக்கான (2022) கூட்டத்தில் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் கணக்காய்வு உள்ளிட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
சிறப்பான கணக்காய்வை அரச அலுவலகங்களில் பேணும் வகையிலும் உத்தியோகத்தர்களின் வகிபாகத்தை சரியாக மேற்கொள்ளும் நோக்கில் தேவையான வழிகாட்டல்கள் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும்.
குறித்த கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டத்தில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் மற்றும் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் வை.பி. நிசார் ஆகியோர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடாத்தினர்
நிருவாக உத்தியோகத்தர், கணக்காளர் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.