இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு  மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது.

மேலும், உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 2,200 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

அதற்காக 3 இலட்சத்து 30 ஆயிரத்து 709 பேர் தகுதிப்பெற்றுள்ளனர், அவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 109 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகளாவர்.

பரீட்சை அனுமதி அட்டைகளில் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நாளை புதன்கிழமை வரை இணையம் வழியான திருத்திக் கொள்ள முடியும், என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.