ராகல சமகிபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில் சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
முச்சக்கரவண்டியை நாவலப்பிட்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்றதாகவும், இதன்போது இரண்டரை வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










