Sri Lanka Tamil News Site

வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனம் தீயிட்டு எரிப்பு

- Advertisement -

-கிளிநொச்சி நிருபர்-

வன ஜீவ ராசிகள் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பொலிஸ், பிரிவுக்குற்பட்ட பூநகரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக சட்டவிரோதமான முறையில் அரச காட்டில் உள்ள மரங்களை வெட்டி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட பாரவூர்தி ஒன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து பறிமுதல் செய்யப்பட்டடு புனகரி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில், குறித்த வாகனம் இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது

இச்சம்பவம் இடம் பெற்றபொழுது வனஜீவராசிகள் அலுவளகத்தில் எவரும் இருக்கவில்லை அருகில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தீயினை அணைத்துள்ளனர்.

இருப்பினும், வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

- Advertisement -