நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா

-யாழ் நிருபர்-

நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா இன்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

தைப்பூசத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரியும் முதலாவது புதிரை அறுவடை செய்ய மட்டுவிலில் உள்ள ஆலயத்திற்கு சொந்தமான வயலுக்கு செல்வர்.

அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது செய்து கந்தனுக்கு படையல் பூசைகள் இடம்பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்படும்.