பிலியந்தலை, பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த யுவதி சந்தேக நபருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதல் உறவை ஏற்படுத்தி அதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
இது தொடர்பில் சந்தேக நபர் யுவதியை பல தடவைகள் அச்சுறுத்தி வந்துள்ளதுடன், அதன் பின்னரே நேற்று ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டுள்ளார்.
புதிய இராணுவ சிப்பாயான சந்தேக நபர், மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -