மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரிக்க நீதிமன்றம் தீர்மானம்

இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அந்த கோரிக்கையை நிராகரிக்க உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது.

காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

குறித்த மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.