கிரியுல்ல – உடியாவல பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
- Advertisement -
உயிரிழந்தவர்கள் 39 வயது மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- Advertisement -