30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதான பாதையில் 18 ரயில்களும், களனிவெளி மற்றும் புத்தளம் மார்க்கத்தில் தலா 02 ரயில்களும் இரத்து செய்யப்படவுள்ளன.
மேலும், இன்று முதல் கரையோரப் பாதையில் 08 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த வியாழன் முதல் தினசரி 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் முடிவு செய்திருந்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இடைநிறுத்தப்பட்டது.
ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றதால், அத்துறையில் கடும் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதன்படி, கடந்த வாரம் 40க்கும் மேற்பட்ட ரயில் பயணங்களை ரயில்வே திணைக்களம் ரத்து செய்தது.
- Advertisement -