சுயாதீன ஆணைக்குழுவுக்கு விண்ணப்பம் கோரல்

சுயாதீன ஆணைக்குழுக்கு தகுதிவாய்ந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை புதன்கிழமை முதல் கோரப்படவுள்ளன.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தேசிய நாளிதழ்களில் நாளை புதன்கிழமை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தேர்தல் இடம்பெறவுள்ள காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்காக விண்ணப்பங்களை கோருவது முறையற்ற செயற்பாடு என தாம் அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தில் குறிப்பிட்டதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.