பேருந்து கட்டணங்கள் குறைப்பு

 

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு  போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தத்தையடுத்து, இவ்வாறு பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைக்கப்படவுள்ள ஏனைய பேருந்து கட்டணங்கள் குறித்து நாளை வியாழக்கிழமை அறிவிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை,  இந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கு தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.