எரிபொருள் விநியோகத்தை தடுப்போருக்கு கட்டாய விடுமுறை

இலங்கை கனியவள கூட்டுத்தாபனமானது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை கட்டாய விடுமறையில் அனுப்ப தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க , எரிபொருள் விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தும் மற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஊழியர்கள் ஆகியோரை இவ்வாறு கட்டாய விடுமுறையில் அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனியவளக் கூட்டுத்தாபன வளாகம், களஞ்சியசாலை முனையம் என்பனவற்றுக்குள் நுழைவதற்கும், அவ்வாறானவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்;. ஏனைய ஊழியர்கள் ஊடாக, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த போராட்டம், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, பொதுஜன முற்போக்கு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்