இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துமாறு கோரிக்கை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எழுத்துமூல அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே.மகேசன் இந்த கடிதத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் செயலாளருக்கு அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் கடந்த 21ஆம் திகதி முதல் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தடை விதித்தது.