லோக்சபா எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கம்

இந்தியா – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா எம்.பி. பதவியிலிருந்து மார்ச் 23 முதல் அமுலாகும் வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து இந்த தகுதி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை வழக்கப்பட்டதுடன், சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்