நவீன விவசாயம்

நவீன விவசாயம்

இந்தியாவின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் விவசாய முறையை மாற்றி நவீன விவாசாய முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் இங்குள்ள விவசாயிகள் முன்பை விட தற்போது லாபம் ஈட்டி வருகின்றனர். பர்ஹியா, பிபரியா, சூர்யாகர்ஹா, ஹல்சி போன்ற தொகுதிகளில் இப்போது விவசாயிகள் குறைந்த அளவிலேயே நெல், கோதுமை பயிரிட்டாலும், நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களில் காய்கறிகளை பயிரிட்டு, அதிக அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது பாரம்பரிய விவசாயத்தை தவிர்த்து பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட ஆரம்பித்துள்ளனர்.

பப்லு மஹதோ, சுமன் சிங், அமித் சிங் போன்றோர், தற்போது காய்கறிளை விளைவித்து வருகின்றனர். இதற்கு முன்னர், நெல், கோதுமை போன்ற பாரம்பரிய விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்ததாகக் கூறுகின்றனர்.

சோதனை முயற்சியாக சிறிய நிலத்தில் காய்கறி அறுவடையை தொடங்கியதாகவும் இந்தச் சோதனை அவர்களுக்கு இலாபம் கிடைத்ததால் தொடர்ந்து அவர்கள் இந்த முறையை பின்பற்றுவதாகவும் தெரிவித்தனர். இப்பொழுது பெரிய அளவில் நவீன முறை விவசாயம் செய்து வருவாயையும் பெற்றுவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்