பாகிஸ்தான் நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு – Update

பாகிஸ்தான்இ ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு செவ்வாக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம்இ பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.

இரு நாடுகளிலும் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்