சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இருவர் பலி

பாகிஸ்தானில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதன் தாக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்