-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் இன்றையதினம் திங்கட் கிழமை வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை.
நீதித்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு கொழும்பில் இடம் பெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள யாழிலுள்ள சட்டத்தரணிகள் சென்றமையாலேயே இந்த நிலை ஏற்பட்டது.
அதன்படி யாழ்ப்பாண சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் மன்றுக்கு வருகை தராமையால் வழக்குகள் யாவும் தவணையிடப்பட்டன.


