பஸ் தரிப்பிடத்துடன் மோதிய வேன்

காலி – அக்குரஸ்ஸ வீதியில் தெபுதெனிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பஸ் தரிப்பிடத்துடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பஸ் தரிப்பிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்