மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டு அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த கைதியும், அவர் மீது தாக்குதலை நடத்திய இருவர் உள்ளிட்ட 9 பேரும் ஒரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கடந்த மாதம் 22ஆம் திகதி கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதனையடுத்துஇ நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தில், கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.