மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக தொடர்ந்து வந்த மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி அதிரடி உத்தரவை இன்று ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விககிரமசிங்க கடந்த வாரம் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை குறித்த பண்ணையாளர்கள் பிரச்சினை தொடர்பில் அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அதற்கு தான் விரைவில் தீர்வு வழங்குவதாகவும் அதற்கு முன் குறித்த விடயம் தொடர்பாக தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
அதற்கமைய பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த குறித்த பிரச்சினையோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதுடன் உடனடியாக பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி மயிலத்தமடுவை ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மையின விவசாயிகளை உடன் வெளியேற்றி தமிழ் பண்ணையாளர்களுக்கு வசதி ஏற்படுத்து கொடுக்கவும் மற்றும் குறித்த பெரும்பான்மையின விவசாயிகளுக்கு தேவை இருப்பின் அவர்களது மாவட்டத்தில் பொருத்தமான இடங்களை வழங்கவும், மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.