மட்டு ஆரையம்பதியில் புதிய பொதுச் சந்தை கட்டடதொகுதியை திறந்து வைத்தார் கிழக்கு ஆளுனர்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபை தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பொதுச் சந்தையில் அமைக்கப்பட்ட நான்கு கட்டடத் தொகுதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் வழங்கப்பட்ட 69 லட்சம் ரூபா நிதி உதவியூடாக இந்த கட்டக தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபால பிள்ளை பிரசாந்தன், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் உட்பட ஏனைய அரச ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்