மட்டக்களப்பு-மகிழவெட்டுவான் வீதியில் உள்ள பாலத்தின் நிலை!

மட்டக்களப்பு மகிழவெட்டுவான் கிராமத்தில் உள்ள பாலம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது.

இப் பாலத்தின் ஊடாக நாளாந்தம் அதிகளவான மக்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதனூடாக அதிகளவான வாகன சாரதிகள் பிரயாணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மகிழவெட்டுவான் கிராமத்துக்கு செல்லும் முக்கிய பாலமே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாகவே பாலம் கீழாக வெடித்த நிலையில் இருந்தும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பாலத்தினூடாக மக்கள் வழமை போல் பிரயாணம் செய்து வந்திருந்தமையால், பாலம் முற்றாக மக்கள் பயணிக்க  முடியாதவாறு சேதமடைந்துள்ளது.

உரிய அதிகாரிகள் இதனைக் கவனமெடுத்து புதிய பாலமொன்றை அமைத்து தருமாறும் மகிழவெட்டுவான் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்