Sri Lanka Tamil News Site

வாய் பேச முடியாத தாயும் சேயும் மீட்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரும், அவரது 3 வயது மகளும் 8 ஆம் திகதி காணாமல் போன நிலையில், அவர்களை பொதுச்சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் தனது கணவருடன் சென்ற நிலையில், அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மற்றும் குழந்தையை தாக்கும் காணொளி என்பன சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

- Advertisement -

இது தொடர்பில் அதிக கவனம் எடுத்த ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய மருத்துவர் பரா.நந்தகுமாரின் தலைமையிலான குழுவினர்கள் இன்று காலை குழந்தையை மீட்டனர்.

இன்று காலை 7.45 மணியளவில், மோசமான தாக்குதலிற்குள்ளான ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த குறித்த குழந்தையும் தாயும், திருகோணமலையிலிருந்து தப்பி வந்து யாழ். பண்ணை பாலத்தடியில் செய்வதறியாது நின்ற போது அவர்கள் குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி டினுசாவால் மீட்கப்பட்டார்கள்.

அவர்கள் வட மாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக வாய் பேச முடியாத தாயும் சேயும் மீட்புயாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாய் பேச முடியாத தாயும் சேயும் மீட்பு

- Advertisement -