கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுந்தரமூர்த்தி ராஜ்பாபு நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த ஜெயானந்தி திருச்செல்வம், மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், அவரது இடத்திற்கு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த சுந்தரமூர்த்தி ராஜ்பாபு, தனது நிர்வாகப் பணியை வாழைச்சேனை கோறளைப்பற்று மற்றும் வவுணதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும், பின்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
அதன் பின் இடமாற்றம் பெற்று சென்று மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிய அவர் கோறளைப்பற்று பிரதேச செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.