காதல் ஜோடிகளின் ஆவிகளுக்கு பயந்து : சிலைகளுக்கு பிரம்மாண்டமான திருமணம் -வீடியோ இணைப்பு
- Advertisement -
காதல்ஜோடிகளின் தற்கொலையை அடுத்து , உயிருடன் இருக்கும் போது காதலை பிரித்த குடும்பத்தினர் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
நிறைவேறாத ஆசையில் இறந்த காதல் ஜோடிகளின் ஆத்மாக்கள் தொடர்ந்து பல வகைகளில் குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததால் உயிர் பயத்தில் இந்த வினோத சடங்கை செய்துள்ளனர்.
உண்மையான திருமணம் செய்து வைப்பதை போல இரு வீட்டாரின் உறவினர்களையும் அழைப்பிதல் கொடுத்து அழைத்து பிரம்மாண்டமாக இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
குஜராத் மாநிலம் டாப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 25) இதே பகுதியைச் சேர்ந்த ராஞ்சனா (வயது -22) ஆகிய இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
உறவினர்களான இருவரும் நல்ல வேலை கிடைத்த நமது காதல் குறித்து வீட்டில் சொல்லலாம் என கணேஷ் தெரிவித்து வந்துள்ளார். இந்தநிலையில் பொறியிலாளரான கணேசிக்கு ஒரு ஐரீ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
- Advertisement -
இதையடுத்து தங்களின் காதல் விவகாரம் குறித்து வீட்டில் தெரிவித்த போது இரு வீட்டாருமே காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு குடும்பங்கள் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பகையை காரணம் காட்டி காதலுக்கு குடும்பத்தினர் தடைவிதித்துள்ளனர்.
தாங்கள் திருமணம் செய்து கொள்வது முடியாத காரியம் என உணர்ந்த இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மரத்தில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
தற்கொலை செய்து கொண்டதன் பின்னர் இருவர் வீட்டிலும் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தன. பெரும் தொழில் நஷ்டமும் ஏற்பட்டது. மேலும், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கனவுகளிலும் இருவரின் ஆவிகளும் வந்து தொந்தரவு செய்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆவிகளுக்குப் பயந்து இருவீட்டாரும் உடனடியாக ஜோதிடரை அனுகி இதற்கான தீர்வை கேட்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடிகள் நிராசையால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களை சிலைகளாக வடித்து திருமணம் செய்து வைத்து விடுமாறும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இரு வீட்டாரும் , உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, கணேஷ் – ராஞ்சனா ஜோடிகளின் கல் சிலைகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- Advertisement -