ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை நிராகரித்துள்ளது.
அத்துடன் அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.