சைக்கிளின் கைப்பிடியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

-யாழ் நிருபர்-

இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி வருகின்றனர்.

ஒருவர் துவிச்சக்கர வண்டியின் ஆசனத்தில் அமந்திருக்க, மற்றையவர் துவிச்சக்கர வண்டியின் கைப்பிடியில் (handle) அமர்ந்திருந்தவாறு பயணம் செய்கின்றனர்.

நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் மாணவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் துவிச்சக்கர வண்டியினை செலுத்தி வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்