14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொட, படபொல கொபேய்துடுவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் இந்திகெட்டிய பென்வல வீதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை தொடர்ந்து குறித்த சிறுவன் பொல்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.