Sri Lanka Tamil News Site

இலங்கைக்குள் உள்நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் கோவிட்-19 நடைமுறை

- Advertisement -

இலங்கைக்குள் உள்நுழையும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் ‘கொவிட் 19’ தடுப்பூசி சான்றிதழ்களை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என, தெரிவித்து மீண்டும் புதிய நடைமுறைகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்குள்   உள்வரும்  அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இது தொடர்பில் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சு புதிய கொவிட் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் ஊடாக நாட்டில் கொவிட் மீண்டும் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -