“செக்ஸ்” இல்லாமைதான் நீண்ட ஆயுளுக்கு காரணம் : 126 வயது தாத்தா அதிரடித் தகவல்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 126 வயதில் வாழும் உலகில் அதிக வயதுடையவர் ஒருவர் வாழ்ந்து வரும் நிலையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.

126 வயதாகும் சிவானந்தா இவர் ஆகஸ்ட் 8, 1896 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது பிறந்த திகதி கடவுச்சீட்டின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஜப்பானை சேர்ந்த ஜிரோமோன் கிமுராதான் உலகிலேயே அதிக வயதான நபர் கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். இவரது உலக சாதனையை சிவானந்தா முறியடித்துள்ளார்.

யோகா ஆசிரியரான இவர் 5.2 அடி உயரம் கொண்டவர் தரையில்தான் உறங்குகிறார். தலையணையாக மரப்பலகையை உபயோகப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இன்றுவரை இவர் எந்தவிதமான நோய்களும் இன்றி வாழ்ந்துவருகின்ற இவர் தனியாக ரயில் பயணங்களும் மேற்கொண்டு வருகின்றார்.

சாதாரண உணவுகளைத்தான் உட்கொள்வதாகவும், பால், பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதாகவும் . மேலும்  தனது ஆரோக்கியம் குறித்து பேசிய இவர்,  தான் “இதுவரை செக்ஸ் வைத்துக் கொள்ளாததும்”  , எண்ணெய் பொருட்களை தவிர்த்து ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பதும்தான் நீண்ட ஆயுளுக்கு காரணம் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.