கதிரைகளுக்காக போட்டியிடுவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் லட்சியம் இல்லை

 

-மன்னார் நிருபர்-

 

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் நாங்கள் சந்திக்க வேண்டும்.எனினும் தேர்தல் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முறையானது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆளுகின்ற நிலை இல்லாத முறையாக இருக்கிறது.மக்களினுடைய எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றது.அந்த வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.

-உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்பது எமது நோக்கம்.

இந்த கால கட்டத்தில் இந்த தேர்தல் வருகிறது என்பதை பார்க்கின்ற போது அரசாங்கம் நடக்க இருக்கின்ற தேர்தலுக்கான நிதியை உலக நாடுகளிடம் இருந்து பெற்று மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை மக்கள் செலுத்துகின்ற வாக்கின் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

எனவே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதும் எமது பிரதான கருத்து.

இத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும்.தேர்தலுக்கான அமைப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒற்றுமையாக எமது இனப்பிரச்சினைஇமக்களின் பிரச்சினைகள் போன்றவற்றை நாங்கள் தட்டிக்கேட்கும்இஅதனை செயல் படுத்துகின்ற விடையங்களை கையாளுகின்ற ஒரு அமைப்பாக தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்பட வேண்டும்.

நாங்கள் முன் வைத்த கோரிக்கை மட்டக்களப்பில் இடம் பெற இருக்கும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன்.

ஒற்றுமையை வலியுறுத்துகின்ற வகையில் எதிர்பார்க்கின்றோம்.எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின் நாங்கள் என்ன செய்வது என்ற நிலைப்பாட்டை தெரிவித்துக் கொள்ள முடியும், என அவர் மேலும் தெரிவித்தார்.