பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்-

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கேரளா கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன் அவர் வசம் இருந்து 11,100 மில்லி கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்