மட்டக்களப்பு மாவட்டம் வாகரை-பால்சேனை பகுதியில் இளம் மனைவி கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்காத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
20 தொடக்கம் 25 வயதிற்குள் மதிக்கத்தக்க குறித்த தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வாக்குவாதம் இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியோடு வாக்குவாதப்பட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










