அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை நாட்டின் வர்த்தக வங்கிகளில் சற்று அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை மாற்றமின்றி 328.35 ரூபாயாகவும், விற்பனை விலை 337.60 ரூபாயாகவும் காணப்படுகிறது.
NDB வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.90 ரூபாயாகவும், விற்பனை விலை 336.90 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.45 ரூபாயிலிருந்து 328.40 ரூபாயாகவும், விற்பனை விலை 336.59 ரூபாயிலிருந்து 336.54 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 326.82 ரூபாயிலிருந்து 326.63 ரூபாயாகவும், விற்பனை விலை 336.75 ரூபாயிலிருந்து 336.55 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.75 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.75 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.










