பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்: வோன் சாரதி தலைமறைவு

பாடசாலை மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வேன் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  பாணமுரே பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

எம்பிலிப்பிட்டிய  பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பாடசாலை வேன் சாரதியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மாணவியின் குடும்பத்தினர்  எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லாமல் பாடசாலை சீருடையில் எம்பிலிப்பிட்டியவில் இருப்பதை அவதானித்த நபர் ஒருவர் பாடசாலைக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் குறித்த மாணவியின் வீட்டுக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டார் எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தான் புத்தகம் வாங்குவதற்காக கடையொன்றிற்கு சென்ற நிலையில் வேனில்  அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

வான் சாரதி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக,  பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணமுரே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.