சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய பஜ்ஜெட் உரையின் போது இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசாங்கம் கணிசமான நிவாரணங்களை வழங்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சிறப்புக் குழுக்களில் உள்ளவர்களைத் தவிரஇ இராணுவப் பணியாளர்கள் 18 ஆண்டுகள் பணிக்குப் பிறகு ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்திற்காக 50 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.