Sri Lanka Tamil News Site

5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

- Advertisement -

லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.

அதன்படி,

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 385 ரூபா

- Advertisement -

கோதுமை மா ஒரு கிலோகிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 250 ரூபா

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 460 ரூபா

ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 190 ரூபா

உள்ளூர் டின் மீன் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 490 ரூபா என லங்கா சதொச அறிவித்துள்ளது.

- Advertisement -