இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளினதும் உறவுகள் மற்றும் சமகால அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு கலந்துரையாடினர்.