சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது, என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் இந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.